விக்ரமில் சூர்யா இந்த ரோலில் தான் நடித்திருக்கிறாரா ?...லோகேஷ் கொடுக்க போகும் சஸ்பென்ஸ் ஜுன் 3 ம் தேதி கமலின் விக்ரம் படம் ரிலீசாக உள்ளது. இதன் ஃபர்ஸ்ட் சிங்கிளாக கமலே எழுதி, பாடிய பத்தல பத்தல பாடல் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஆழ்வார்பேட்டை ஆண்டவா பாடலை போலவே இருக்கிறது என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. கமல் எழுதிய வரிகள் மத்திய அரசையும், மாநில அரசையும் தாக்குவதாக உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்நிலையில் விக்ரம் படத்தில் சூர்யா நடித்திருப்பதாக தகவல் வெளியானது. விக்ரம் ஷுட்டிங் ஸ்பாட்டில் கமலை, சூர்யா கட்டிப்பிடித்த வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி இதை கன்ஃபார்ம் செய்துள்ளது. அமிதாப் பச்சன் நடிப்பதாக ஒப்புக் கொண்ட சீனில் தான் சூர்யா நடித்துள்ளார் என்றொரு தகவலும், கமலை இளமை தோற்றத்தில் காட்ட De aging டெக்னாலஜி பயன்படுத்தி சரியாக வராததால், இளமை கால கமல் ரோலில் தான் சூர்யா நடித்திருக்கிறார் என்று மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது. ஆனால் லேட்டஸ்ட் தகவலாக, விக்ரம் படத்தின் கடைசி இரண்டு நாள் ஷுட்டிங்கில் தான் சூர்யா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டதாம்...