Posts

Showing posts with the label #Amazing | #Beauty | #Acting | #Pallavi

அழகிலும், நடிப்பிலும் அசத்திய சாய்பல்லவி - கார்கி திரைவிமர்சனம்!985251092

Image
அழகிலும், நடிப்பிலும் அசத்திய சாய்பல்லவி - கார்கி திரைவிமர்சனம்! ஒரு படத்தில் கதாநாயகியாக நடிப்பதில் இருந்து ஒரு கதையின் நாயகியாக பல நடிகைகள் தற்போது படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சாய்பல்லவி கதையின் நாயகனாக நடித்துள்ள படம் கார்கி.  ஒன்பது வயது குழந்தையை நான்கு வடமாநில இளைஞர்கள் கற்பழித்து விடுகின்றனர். இந்த செய்தி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது. இந்நிலையில் ஐந்தாவது நபராக சாய் பல்லவியின் அப்பா ஆர்.எஸ். சிவாஜியும் கைதாகிறார்.  இதனால் சாய்பல்லவி குடும்பம் பெறும் இன்னல்களுக்கு ஆளாகிறது. பின்பு சட்ட போராட்டங்களின் மூலம் சாய் பல்லவி தனது அப்பாவை காப்பாற்றினாரா?இறுதியில் அவருக்கு என்ன ஆனது என்பதே கார்கி படத்தின் ஒன்லைன்.  இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் வெளியிடுகிறது.  சக்தி பிலிம் பேக்டரி தமிழகத்தில் இப்படத்தை வெளியிட்டுள்ளது. சாய் பல்லவி கார்கி படத்தில் ஒரு பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார். எந்தவித பெரிய மேக்கப்பும் இல்லாமல், மிகவும் எளிமையாக அதே சமயம் அழகாகவும் காட்சியளிக்கிறார். படம் முழுக்க நமது பக்கத்து வீட்டு பெண் போலவே இருக்கிறார்...