அதிர்ச்சி! சென்னை, கோவையை அடுத்து இந்த மாவட்டங்களிலும் அதிகரிக்குது கொரோனா! பாதுகாப்பா இருங்க மக்களே!1983033418
அதிர்ச்சி! சென்னை, கோவையை அடுத்து இந்த மாவட்டங்களிலும் அதிகரிக்குது கொரோனா! பாதுகாப்பா இருங்க மக்களே! தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், விருதுநகரிலும் கல்லூரி மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவையை அடுத்து தற்போது தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதிலும் பள்ளி, கல்லூரிகளில் கொரோனா அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியில் 3 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அங்கு படித்து வரும் 160 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இதுவரை வந்த பரிசோதனை முடிவுகளின்படி 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது விருதுநகர் மாவட்டத்திலும் மாணவர்களை ...