அரசு பேருந்து ஊழியர்கள் ஊதிய உயர்வு: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
அரசு பேருந்து ஊழியர்கள் ஊதிய உயர்வு: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
அரசு பேருந்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது குறித்த பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன .
கடந்த பல ஆண்டுகளாக அரசு பேருந்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உயர்த்தப்படாத நிலையில் தற்போது திமுக அரசு ஏற்பட்டவுடன் ஊதிய உயர்வு ஏற்படும் என்றும் தகவல்கள் வெளியானது .
இந்த நிலையில் அரசு பேருந்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து இன்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களுடன் தொழிற்சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
குரோம்பேட்டையில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் அரசு போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் ஊதிய உயர்வு எவ்வளவு என்பது குறித்த முடிவு தெரியும் என்றும் கூறப்படுகிறது.
அரசுப்பேருந்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை நடத்த ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Spread the love
Comments
Post a Comment