கள்ளக்குறிச்சி ஆபரேஷன் 2.0: குடும்பத்தோடு தூக்கிய போலீஸ்!
கள்ளக்குறிச்சி ஆபரேஷன் 2.0: குடும்பத்தோடு தூக்கிய போலீஸ்! தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் ஆப்ரேஷன் 2.0 உத்தரவுப்படி கள்ளக்குறிச்சிக்கு இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வருவதாக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி உத்தரவின்பேரில் கள்ளக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாரதி தலைமையிலான காவல்துறையினர் கோட்டைமேடு கோமுகி ஆற்றுப்பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சங்கராபுரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் காவல்துறையினரை கண்டதும் தப்பியோட முயன்றுள்ளனர். சந்தேகம் அடைந்த காவல்துறையினர் 2 இருசக்கர வாகனத்தில் மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர் அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராமன் மனைவி இளையராணி, மகன் தினகரன், பட்டதாரியான இளைஞரான பரத் உள்ளிட்ட நால்வரும் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா கடத்தி வந்துள்ளனர் என்பது செய்ததில் தெரியவந்தது. கஞ்சாவை கைப்பற்றிய காவல்துறையினர் நான்கு பேரை கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். ...