இனி பெட்ரோல் கிடையாது!! நாளை பெட்ரோல், டீசல் விலை கொள்முதல் நிறுத்தம்!!1691580085
இனி பெட்ரோல் கிடையாது!! நாளை பெட்ரோல், டீசல் விலை கொள்முதல் நிறுத்தம்!! சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு மாற்றி அமைக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் சரி செய்ய வலியுறுத்தி நாளை ஒருநாள் மட்டும் பெட்ரோல், டீசல் விலை கொள்முதல் நிறுத்தப்படும் என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு பெட்ரோல்-டீசலுக்கான கூடுதல் கலால் வரியை லிட்டருக்கு தலா ரூ.8 மற்றும் ரூ.6 என விலை குறைத்ததற்காக மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எண்ணெய் நிறுவனங்கள் கலால் வரி குறைப்பு காரணமாக சில்லறை விற்பனை விலையை உடனடியாக மாற்றி அமைத்ததற்காக தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தனது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்கிறது. சில்லறை விற்பனையாளர்களாகிய எங்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து இன்று வரை விளிம்பு தொகையை அதிகரித்து வழங்கவில்லை. 2017-ம் ஆண்டு 1 லிட்டர் பெட்ரோல் 60 ரூபாயானது. தற்போது 1 லிட்டர் பெட்ரோல் 104 ரூபாயாக உள்ளது. அதேபோல 1 லிட்டர் டீசல் 52 ரூபாயில் இருந்த...