விக்ரமில் சூர்யா இந்த ரோலில் தான் நடித்திருக்கிறாரா ?...லோகேஷ் கொடுக்க போகும் சஸ்பென்ஸ்


விக்ரமில் சூர்யா இந்த ரோலில் தான் நடித்திருக்கிறாரா ?...லோகேஷ் கொடுக்க போகும் சஸ்பென்ஸ்


ஜுன் 3 ம் தேதி கமலின் விக்ரம் படம் ரிலீசாக உள்ளது. இதன் ஃபர்ஸ்ட் சிங்கிளாக கமலே எழுதி, பாடிய பத்தல பத்தல பாடல் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஆழ்வார்பேட்டை ஆண்டவா பாடலை போலவே இருக்கிறது என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. கமல் எழுதிய வரிகள் மத்திய அரசையும், மாநில அரசையும் தாக்குவதாக உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்நிலையில் விக்ரம் படத்தில் சூர்யா நடித்திருப்பதாக தகவல் வெளியானது. விக்ரம் ஷுட்டிங் ஸ்பாட்டில் கமலை, சூர்யா கட்டிப்பிடித்த வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி இதை கன்ஃபார்ம் செய்துள்ளது. அமிதாப் பச்சன் நடிப்பதாக ஒப்புக் கொண்ட சீனில் தான் சூர்யா நடித்துள்ளார் என்றொரு தகவலும், கமலை இளமை தோற்றத்தில் காட்ட De aging டெக்னாலஜி பயன்படுத்தி சரியாக வராததால், இளமை கால கமல் ரோலில் தான் சூர்யா நடித்திருக்கிறார் என்று மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது.

ஆனால் லேட்டஸ்ட் தகவலாக, விக்ரம் படத்தின் கடைசி இரண்டு நாள் ஷுட்டிங்கில் தான் சூர்யா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டதாம். எண்ணூர் துறைமுகத்தில் எடுக்கப்பட்ட இந்த சீனில் சூர்யாவுடன் இணைந்து கமல் நடிக்கவில்லையாம். அதே சமயம், சூர்யா நடித்த சீன்கள் எடுக்கப்பட்ட போது செட்டிற்கு வந்த கமல் சூர்யாவை கட்டிப்பிடித்து பாராட்டி உள்ளார். அந்த காட்சியின் வீடியோ தான் தற்போது வெளியாகி உள்ளதாம்.

விக்ரம் படத்தில் சூர்யா, கேங்ஸ்டர் ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அவரின் அடியாட்களாக தான் அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன்,பாவக்கதைகள் படத்தில் நடித்த ஜாஃபர் ஷாதிக் ஆகியோர் நடித்திருக்கிறார்களாம். கெஸ்ட் ரோல் என்றாலும் சூர்யா நடித்துள்ள ரோல் கொஞ்சம் லென்த் ஆனது தானாம். படத்தின் க்ளைமாக்சில் தான் சூர்யா நடித்துள்ள சீன்கள் இடம்பெறுகிறதாம்.

லோகேஷின் மாஸ் சஸ்பென்ஸ்

விக்ரம் படத்தில் சூர்யா நடித்திருக்கிறார் என்ற தகவலை விட, இதில் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் வைத்துள்ள ட்விஸ்ட், சஸ்பென்ஸ் பற்றிய தகவல் தான் அனைவரையும் மிரள வைத்துள்ளது. அதாவது, லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்திலும் அர்ஜுன் தாஸ், ஹரிஸ் உத்தமன் ஆகியோர் நடித்திருப்பார்கள். விக்ரம் படத்தின் முடிவில் தான் கைதி 2 படத்தின் கதை ஆரம்பமாகிறதாம். கைதி படத்தின் கதையுடன் தொடர்பு இருப்பதாக தான் விக்ரம் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

கைதி படத்தில் மயங்கிக் கிடக்கும் போலீஸ் கும்பலை கார்த்தி காப்பாற்றுவார். சிறையில் இருக்கும் ஹரிஷ் உத்தமன் போன்றவர்களை ரிலீஸ் செய்ய அர்ஜுன் தாசின் கூட்டம் முயற்சி செய்யும். விக்ரம் படத்தில் கமல் போலீஸ் கெட்அப்பில் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி சிறையில் இருப்பதாகவும், அவரை தப்பிக்க வைக்க முயற்சி செய்யும் ரோலில் ஃபகத் ஃபாசில் நடித்திருக்கிறாராம். இவர்களின் சதியை கமல் எப்படி முறியடிக்கிறார் என்பது தான் விக்ரம் படத்தின் கதையாம். கைதி படத்திற்கும், விக்ரம் படத்திற்கும் அப்படி என்ன தொடர்பு இருக்கிறது. இதில் கைதி 2 படத்தின் கதை எப்படி ஆரம்பமாகிறது என்பது தான் விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜ் வைத்துள்ள சஸ்பென்சாம்.

ஆஹா...இப்படி ஒரு பிளானா

இதில் கூடுதல் தகவல் என்னவென்றால், விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருக்கும் போது சூர்யா எதற்காக நடித்திருக்கிறார் என்ற கேள்வியும் ஏற்படுகிறது. அதற்கு பதில் தான் கைதி 2 படமாம். விக்ரம் படத்தில் கேங்ஸ்டராக வரும் சூர்யா, கைதி 2 படத்திலும் வர போகிறாராம். கைதி 2 படத்தில் கார்த்திக்கு வில்லன் ரோலில் சூர்யாவை நடிக்க வைக்க பிளான் போட்டுள்ளாராம் லோகேஷ். 24 படத்திற்கு பிறகு கைதி 2 படத்தில் தம்பி கார்த்திக்கு வில்லனாக சூர்யா நடிக்க போகிறாராம். அதற்காக தான் விக்ரம் படத்தின் க்ளைமாக்சில் சூர்யா நடிக்கிறாராம்.

Comments

Popular posts from this blog