தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறைக்கு பின் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்!1675808103
தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறைக்கு பின் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்! தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறைக்கு பின் திட்டமிட்டபடி ஜூன் 13 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டிருந்ததை தொடர்ந்து, 2022 - 2023 ஆம் கல்வியாண்டுக்கான ஆண்டு திட்டத்திற்கான அட்டவணையை (Annual planner) வெளியிட்டுள்ளது. அதில், அடுத்த கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள் தொடங்கவிருக்கும் தேதிகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் வழங்கப்படும் 23 வகையான சான்றிதழ்களை இணையதளம் வழியாக வழங்கும் திட்டம் மற்றும் வரும் கல்வியாண்டிற்கான நாட்காட்டி, ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட காலாண்டு நாட்காட்டி உள்ளிட்டவற்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டு தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், "ஜூன் 13 ஆம் தேதி முதல் ஒன்று முதல் 10 ஆம் வகுப்ப...