Posts

Showing posts with the label #Government | #Overturns | #Injures | #Including

அரசு பஸ் தலைகீழாக கவிழ்ந்து விபத்து.. டிரைவர், கண்டக்டர் உட்பட 6 பேர் படுகாயம்

Image
அரசு பஸ் தலைகீழாக கவிழ்ந்து விபத்து.. டிரைவர், கண்டக்டர் உட்பட 6 பேர் படுகாயம்   கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு  நேற்று இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ் சிதம்பரம் புறவழிச்சாலையில் சென்றபோது எதிரே வந்த கார் ஒன்றின் மீது மோதாமல் இருக்க டிரைவர் வண்டியை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலை ஒரத்தில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் நன்னிலம் பகுதியைச் சேர்ந்த மனோகரன், கண்டக்டர் திருநன்றியூர் பகுதியைச் சேர்ந்த  ராமதாஸ்ஆக இருவரும் படுகாயமடைந்தனர். மேலும் பஸ்சில் பயணம் செய்த கலியபெருமாள் (57), கலா (35), முருகவேல் (38) மற்றும் காளியப்பன் (52) ஆகிய 4 பயணிகளும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அண்ணாமலைநகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.   இந்த விபத்து குறித்து தகவலறிந்த அண்ணாமலைநகர் போலீசார் மற்றும் சிதம்பரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவம் குறித்து...