ஏப்ரல் 1 ஏன் முட்டாள்கள் தினம்? எந்த நாட்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பு இந்த ஏப்ரல்-1க்கு உண்டு..! ஏன்தெரியுமா?
ஏப்ரல் 1 ஏன் முட்டாள்கள் தினம்? எந்த நாட்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பு இந்த ஏப்ரல்-1க்கு உண்டு..! ஏன்தெரியுமா? வருடத்தில் பல நாட்கள் பல்வேறு சிறப்பு தினங்களாக கொண்டாடப்பட்டாலும் அவை எவற்றிற்கும் இல்லாத ஒரு சிறப்பு இந்த ஏப்ரல்-1க்கு உண்டு. அதாவது பெண்கள் தினத்தை பெண்களும், ஆண்கள் தினத்தை ஆண்களும், காதலர் தினத்தை காதலர்களும், குழந்தைகள் தினத்தை குழந்தைகளும் உரிமை கொண்டாடுவார்கள். ஆனால் இப்படி யாருமே உரிமை கொண்டாடாத ஒரு தினம் தான், இன்றைய முட்டாள்கள் தினம். ஏன் ஏப்ரல் ஒன்றை முட்டாள்கள் தினம் என்று கொண்டாடுகிறோம் என்பதற்கு அனேக வரலாறுகள் இருந்தாலும், ஃபிரான்சில் தோன்றியதாகக் கூறப்படும் ஒரு வரலாறு மட்டும் அனைவரும் ஒப்புக்கொள்ளத் தக்கதாய் உள்ளது. அதாவது, 1562-ம் ஆண்டில் போப் கிரிகோரி புதிய காலண்டரை அறிமுகப்படுத்தி, அதுவரை ஆண்டின் துவக்க நாளாக இருந்த ஏப்ரல்-1யை மாற்றி, ஜனவரி 1-ம் தேதியை புத்தாண்டு தினமாக அறிவிக்கிறார். ஆனாலும், இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தொடர்ந்து ஏப்ரல்-1ம் தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடி வந்தனர். ஜனவரி மாதம் 1-ம் தேதியைப் புத்தாண்டாக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களுக்கு, ம...