தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா! வகுப்புகளை ஆன்லைனில் நடத்த உத்தரவு! 508119266
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா! வகுப்புகளை ஆன்லைனில் நடத்த உத்தரவு! தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் தொற்று அதிகரிப்பு காரணமாக அரசு மருத்துவமனையில் காய்ச்சல் புறநோயாளிகள் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன்பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா தொற்று படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் கொரோனா நோயாளிகள் இல்லை என்ற நிலை உருவானது. ஆனால் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று படிப்படியாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி நேற்று 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவ கல்லூரியில் படிக்கும் 200 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 30 மாணவ,...