பிரியாணி பிரியர்களே ஹேப்பி நியூஸ்.. 3 நாள் நடைபெறும் ஆம்பூர் பிரியாணி திருவிழா.. சுவைக்க தயாரா?


பிரியாணி பிரியர்களே ஹேப்பி நியூஸ்.. 3 நாள் நடைபெறும் ஆம்பூர் பிரியாணி திருவிழா.. சுவைக்க தயாரா?


ஆம்பூர் என்றாலே முதலில் நம் நினைவில் வருவது பிரியாணி தான். அந்த பெயரை நினைக்கும் போதே, நம் மனதில் பிரியாணியின் மனமும், சுவையும் வந்துபோகும். அப்படி நாவில் எச்சில் ஊற வைக்கும் ஆம்பூர் பிரியாணியை விரும்பாத அசைவ பிரியர்கள் கிடையாது.

அந்தவகையில், ஆம்பூர் பகுதியில் இருந்து அனைத்து பிரியாணி கடைகளையும் ஒன்று சேர்த்து பிரியாணி திருவிழாவைக் கொண்டாட திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, ஆம்பூர் வர்த்தக மையத்தில் வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை 3 நாட்கள் பிரியாணி திருவிழா நடைபெறுகிறது. 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திருவிழா நடைபெறுகிறது. அதனைப்போலவே 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அன்றைய நாளில் பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை பிரியாணி திருவிழா நடைபெற உள்ளது.

30க்கும் மேற்பட்ட அரங்குகள், 20க்கும் அதிகமான பிரியாணி வகைகள் என பிரியாணி திருவிழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பார்வையாளர்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : இந்தியாவில் குறைந்து கொண்டே வரும் ஃபெர்டிலிட்டி ரேட் : என்ன காரணம்..?

மேலும், மக்கள் குஷியும் கும்மாளமுமாகக் கூடி ஆளுக்கொரு பிடி எடுத்து சாப்பிட ரெடியா?’’ என அழைப்பு விடுத்திருக்கிறார் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா.

அப்புறம் என்ன பிரியாணி பிரியர்களே பிரியாணியை சுவைக்க நீங்க தயாராகிவிட்டீர்களா? உடனே கிளம்புங்க திருப்பத்தூருக்கு...

Comments

Popular posts from this blog