தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த இம்ரான் எஜ்பவரின் மகள் ரஜியா என்பவருக்கும் வெங்கடசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ரஃபி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, இத்தம்பதியருக்கு அப்சரின், சஹானா மற்றும் பர்ஜானா ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர். ரஜியாவின் கணவர் ரஃபி என்பவர் இறந்து விட்டதால், தற்போது பாப்பிரெட்டிப்பட்டியில் ரஜியா அவரது தாய், தந்தையுடன் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக வீடோ, பட்டா நிலமோ ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ரஜியா தனது 3 பெண் குழந்தைகளுடன் மயானத்தில் வசிக்கும் அவலநிலை ஏற்பட்டது. இதுகுறித்து சமயம் தமிழ் செய்திகள் உள்ளிட்ட பல செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன. அதன் அடிப்படையில், வருவாய்துறை... விரிவாக படிக்க >>