``ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்!” - கனிமொழி எம்.பி
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட கனிமொழி எம்.பி, இன்று காலை நாகர்கோவில் வந்தார். முன்னாள் அமைச்சரும், முன்னாள் மாவட்டச் செயலாளருமான சுரேஷ்ராஜனின் மகனின் திருமணம் கடந்த 3-ம் தேதி நடந்தபோது கனிமொழி கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து நாகர்கோவிலில் உள்ள சுரேஷ்ராஜனின் வீட்டுக்குச் சென்று மணமக்களை வாழ்த்தினர கனிமொழி. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, "மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்திட்டம் இப்போது பெண்களுக்கான கல்வி உதவித்திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது நிச்சயமாக பெண்களுக்கு எதிரான திட்டம் அல்ல. பெண்கள் முன்னேற்றத்துக்கான திட்டம். உயர்கல்விக்குச் செல்லும் பெண்களுக்கு பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment