மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் சேர்ப்பு வரும் 31ம் தேதிக்குள் கடைசி நாள்!! சென்னை: தமிழகத்தில் மின் இணைப்புடன், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி மின் வாரியம் அறிவித்தது. இதையடுத்து நவம்பர் 28 ஆம் தேதி முதல் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வருகிற 31-ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்குமாறு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்கும் கால அவகாசம் வரும் 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இந்த நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், இன்று மதியம் வரை 2 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இணைத்த மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இதுவரை மின் இணைப்பு எண்ணோடு ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் ஜனவரி 31-க்குள் இணைத்திட வேண்டுகிறேன் என மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் தமிழகத்தில் மின் இணைப்புடன், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தி...