மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் சேர்ப்பு வரும் 31ம் தேதிக்குள் கடைசி நாள்!!
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் சேர்ப்பு வரும் 31ம் தேதிக்குள் கடைசி நாள்!!
சென்னை: தமிழகத்தில் மின் இணைப்புடன், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி மின் வாரியம் அறிவித்தது. இதையடுத்து நவம்பர் 28 ஆம் தேதி முதல் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வருகிற 31-ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்குமாறு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்கும் கால அவகாசம் வரும் 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இந்த நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், இன்று மதியம் வரை 2 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.
இணைத்த மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இதுவரை மின் இணைப்பு எண்ணோடு ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் ஜனவரி 31-க்குள் இணைத்திட வேண்டுகிறேன் என மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்
தமிழகத்தில் மின் இணைப்புடன், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. மின்சார எண்னுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக இன்று முதல் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பு
பண்டிகை நாட்கள் தவிர ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் டிசம்பர் 31-ம் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், ஏராளமானவர்கள் மின் இணைப்பு எண்ணை இணைக்காததால் இதற்கான கால அவகாசம் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். இதன்படி ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2 கோடி ஆதார் எண்கள் இணைப்பு
இணையதளத்திலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் சார்பில் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற புதிய இணையதள முகவரி அறிமுகம் செய்யப்பட்டது. மின் நுகர்வோர்கள் இணையதளம் மூலமாகவும் நேரடியாக சிறப்பு முகாம்கள் மூலமாகவும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் 2 கோடி ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
31-க்குள் இணைத்திட வேண்டுகிறேன்
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் செந்தில்பாலாஜி ட்விட்டர் வெளியிட்டுள்ள பதிவில், 'தமிழக மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், முதல்வரின் வழிகாட்டுதலின்படி துவங்கப்பட்ட, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், இன்று மதியம் வரை 2 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இணைத்த மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இதுவரை மின் இணைப்பு எண்ணோடு ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் ஜனவரி 31-க்குள் இணைத்திட வேண்டுகிறேன்' இவ்வாறு அந்தப் பதவில் கூறியுள்ளார்.
Comments
Post a Comment