பழம்பெரும் நடிகைக்கு “தாதா சாகேப் பால்கே” விருது அறிவிப்பு..! திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் தாதா சாகேப் பால்கே விருது கடந்தாண்டு நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது பழம்பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் தாதா சாகேப் பால்கே விருது கடந்தாண்டு நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதினை நடிகர்கள் அமிதாப்பச்சன், அசோக் குமார், ராஜ்குமார், திலீப் குமார், சிவாஜி கணேசன்,வினோத் கண்ணா, இயக்குநர்கள் கே.பாலசந்தர், அடூர் கோபாலகிருஷ்ணன், சத்யஜித் ராய், கே.விஸ்வநாத், பாடகிகள் ஆஷா போஸ்லே, லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பலரும் பெற்றுள்ளனர். கடைசியாக 2019 ஆம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக இந்த விழா நடத்தப்படாமல் இருந்த நிலையில், கடந்தாண்டு நடைபெற்ற 67 வ...