இனி பெட்ரோல் கிடையாது!! நாளை பெட்ரோல், டீசல் விலை கொள்முதல் நிறுத்தம்!!1691580085


இனி பெட்ரோல் கிடையாது!! நாளை பெட்ரோல், டீசல் விலை கொள்முதல் நிறுத்தம்!!


 

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு மாற்றி அமைக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் சரி செய்ய வலியுறுத்தி நாளை ஒருநாள் மட்டும் பெட்ரோல், டீசல் விலை கொள்முதல் நிறுத்தப்படும் என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு பெட்ரோல்-டீசலுக்கான கூடுதல் கலால் வரியை லிட்டருக்கு தலா ரூ.8 மற்றும் ரூ.6 என விலை குறைத்ததற்காக மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எண்ணெய் நிறுவனங்கள் கலால் வரி குறைப்பு காரணமாக சில்லறை விற்பனை விலையை உடனடியாக மாற்றி அமைத்ததற்காக தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தனது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்கிறது.

சில்லறை விற்பனையாளர்களாகிய எங்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து இன்று வரை விளிம்பு தொகையை அதிகரித்து வழங்கவில்லை. 2017-ம் ஆண்டு 1 லிட்டர் பெட்ரோல் 60 ரூபாயானது. தற்போது 1 லிட்டர் பெட்ரோல் 104 ரூபாயாக உள்ளது. அதேபோல 1 லிட்டர் டீசல் 52 ரூபாயில் இருந்து 96 ரூபாயாக உயர்ந்துள்ளது. தற்போது விற்பனையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் விளிம்பு தொகையாக பெட்ரோலுக்கு ரூ3.06; டீசலுக்கு ரூ 1.88 வழங்குகின்றன. இதில் 70% நிர்வாக செலவினங்களுக்கு செலவிடப்படுகிறது. விளிம்பு தொகை கட்டமைப்பு என்பது கடந்த 2010-ம் ஆண்டில் உள்ள செலவினங்களுக்கான கணக்கீட்டை உள்ளடக்கியது. 12 ஆண்டுகளாகியும் இன்னமும் அதே நிலையே நீடிக்கிறது. கடந்த மே 21-ந் தேதி மத்திய அரசால் குறைத்து அறிவிக்கப்பட்ட சிறப்பு கலால் வரியால் தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 9.12; டீசல் லிட்டருக்கு ரூ6.68-க்கு எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன.

இதனால் விலை குறைப்பு நாளில் ரூ2 லட்சம் முதல் ரூ10 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது. ஆகையால் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் மற்றும் மே 21-ந் தேதி சில்லறை விலை குறைப்பால் ஏற்பட்ட இழப்பை முதன்மை உரிமையாளர் என்ற அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் விற்பனையாளர்களுக்கு ஈடுசெய்ய வேண்டும். இது குறித்து எண்ணெய் நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 31-ந் தேதி ஒரு நாள் மட்டும் பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்வதை நிறுத்த உள்ளோம். பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பெட்ரோல், டீசல் விநியோகம் வழங்கப்படும். இவ்வாறு தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog