தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா! வகுப்புகளை ஆன்லைனில் நடத்த உத்தரவு! 508119266


தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா! வகுப்புகளை ஆன்லைனில் நடத்த உத்தரவு!


தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் தொற்று அதிகரிப்பு காரணமாக அரசு மருத்துவமனையில் காய்ச்சல் புறநோயாளிகள் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன்பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா தொற்று படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் கொரோனா நோயாளிகள் இல்லை என்ற நிலை உருவானது.

ஆனால் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று படிப்படியாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி நேற்று 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவ கல்லூரியில் படிக்கும் 200 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 30 மாணவ, மாணவிகளுக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மருத்துவக்கல்லூரி விடுதியில் மாணவ மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிக்கும் காரணத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் மீண்டும் காய்ச்சல் புறநோயாளிகள் பிரிவு திறக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மருத்துவர் ஒரு செவிலியர்கள் நியமிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் நபர்கள் சளி காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் முககவசம் அணிய வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

Comments

Popular posts from this blog