தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறைக்கு பின் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்!1675808103


தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறைக்கு பின் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்!


தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறைக்கு பின் திட்டமிட்டபடி ஜூன் 13 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டிருந்ததை தொடர்ந்து, 2022 - 2023 ஆம் கல்வியாண்டுக்கான ஆண்டு திட்டத்திற்கான அட்டவணையை (Annual planner) வெளியிட்டுள்ளது. அதில், அடுத்த கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள் தொடங்கவிருக்கும் தேதிகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் வழங்கப்படும் 23 வகையான சான்றிதழ்களை இணையதளம் வழியாக வழங்கும் திட்டம் மற்றும் வரும் கல்வியாண்டிற்கான நாட்காட்டி, ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட காலாண்டு நாட்காட்டி உள்ளிட்டவற்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டு தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், "ஜூன் 13 ஆம் தேதி முதல் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை திட்டமிட்டபடி பள்ளிகள் தொடங்கப்படும் என்றும், ஜூன் 20 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பிற்கும், ஜுன் 27ஆம் தேதி முதல் 11 ஆம் வகுப்பிற்கும் வகுப்புகள் துவக்கப்படும் அவர் தெரிவித்தார்.

மேலும், அடுத்த கல்வியாண்டுக்கான தேர்வுகள் (school Annual planner) எப்போது தொடங்கும் என்பதற்கான தேதிகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் எனவும், வரும் கல்வியாண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 26 முதல் 30 வரை காலாண்டுத் தேர்வு நடைபெறும். 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை காலாண்டுத் தேர்வு நடைபெறும்.

வரும் கல்வியாண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு டிசம்பர் 19 முதல் 23-ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெறும். 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 16 முதல் 23-ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அதில் 2022-23 ஆம் கல்வியாண்டில் பொதுத்தேர்வு (Public exam 2023) நடைபெறும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10-ம் வகுப்புக்கு ஏப்ரல் 3-ல் பொதுத்தேர்வு தொடங்குகிறது. 11-ம் வகுப்புக்கு மார்ச் 14-ல் தொடங்குகிறது. 12-ம் வகுப்புக்கு மார்ச் 13-ல் தொடங்குகிறது.

வரும் கல்வியாண்டில் ( 2022-23 ) 210 வேலைநாட்களுடன் பள்ளிகள் செயல்பட உள்ளது. வாரத்தில் 5 நாட்கள் பள்ளிகளுக்கு வேலைநாட்கள். சனிக்கிழமை பள்ளிகள் கிடையாது. தேவைப்பட்டால், சனிக்கிழமையும் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து அவர் கூறுகையில், நேற்று நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணித பாடத்தில் பாடத்திட்டத்தை தாண்டிய கேள்விகள் கேட்கப்படுவதால் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ஜூன் 13 ஆம் தேதிக்குள் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமலுக்கு வராது என்றும், பள்ளிகளில் 8.30 மணிக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் எனவும், எப்போது திட்டத்தை தொடங்கலாம் என்று முதலமைச்சரிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என அவர் கூறினார்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை, பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட இலவச திட்டங்கள் பள்ளி துவங்கிய ஒரு மாத காலத்திற்குள் வழங்கப்படும் என்று கூறினார். மேலும், தேர்வு எழுத வருகை தராத மாணவர்களுக்கு உத்வேகம் அளித்து அவர்களை மீண்டும் வர செய்யக்கூடிய செயல்களை பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது.

வெயில் காரணமாக cbse பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை காரணமாக CBSE பள்ளிகளுக்கும் ஜீன் மாதம் தான் பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதனால் அதில் பெரிய மாற்றம் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

50 Beautiful Burgundy Hairstyles to Consider for 2020

Perfectly Easy Homemade Waffle Recipe #Homemade