chocolate day 2023 - சாக்லெட் உண்மையிலேயே பெண்களுக்கு என்னென்ன காரணங்களுக்காக கொடுக்கலாம்?... தெரிஞ்சிக்கங்க...684379044
chocolate day 2023 - சாக்லெட் உண்மையிலேயே பெண்களுக்கு என்னென்ன காரணங்களுக்காக கொடுக்கலாம்?... தெரிஞ்சிக்கங்க...
சாக்லெட் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் மிகவும் பிடிக்கும் என்பதை தாண்டி , சாக்லெட் சாப்பிடுவது பல்வேறு ஆரேக்கிய நன்மைகளைச் செய்யக்கூடியது. அதோடு நரம்பு செல்களைத் தூண்டி மூளையைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதோடு ஹேப்பி ஹார்மோன்களை அதிகமாக சுரக்கச் செய்து கார்டிசோல் என்றும் மன அழுத்தத்துக்கு காரணமாகும் ஹார்மோன்களை குறைக்கிறது. அதனால் தான் சாக்லெட் சாப்பிட்டதும் மிக மகிழ்ச்சியாக உணர்கிறோம்.
சாக்லெட் தினத்தன்று
சாக்லெட் தினத்தன்று பெரும்பாலும் எல்லா ஆண்களும் தங்களுடைய காதலிக்கு சாக்லெட்டை பரிசாகக் கொடுப்பது வழக்கம் தான். அதிலென்ன கூடுதல் ஸ்பெஷல் என்று கேட்கலாம்.
எப்போதும் கொடுக்கும் சாக்லெட்டாக இல்லாமல் சம்திங் ஸ்பெஷலாக ஏதாவது ஸ்பெஷல் சாக்லெட்டுகளைத் தேடி வாங்கிக் கொடுங்கள். அல்லது கொக்கோவை வாங்கி நீங்களு உங்களுடைய கைகளால் உங்களுடைய காதலிக்கு சாக்லெட் செய்து கொடுக்கலாம். சாக்லெட் டே இன்னும் ஸ்பெஷல் டே வாக மாற்றிவிடும்.
பிறந்த நாளன்று
ஒரு பெண்ணின் பிறந்த நாளன்று சாக்லெட்டை பரிசாகக் கொடுங்கள். பிறந்த நாள் என்றால் கேக் கட்டாயம் இருக்க வேண்டும் தான். அதேசமயம் சாக்லெட்டை ஸ்பெஷலாகக் கொடுங்கள். இன்னும் கூடுதலாக குஷியாகிவிடுவார்.
காதலர் தினத்தன்று
காதலர் தினத்தன்று உங்களுடைய காதலிக்குக் கொடுக்கிற பரிசுப் பொருள்களையும் அந்த நாளை ஸ்பெஷலாக்க பயங்கர ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருப்பீர்கள்.
ஆனால் சிலப்பு நிற இதய வடிவ பலூன்களும் ரிப்பன்களும் சுற்றிலும் வைத்து, நடுவே அழகாக ஸ்டிராபெர்ரி பழங்களுக்கு நடுவே இதய வடிவ சாக்லெட்டுகளை அடுக்கி வைத்து சர்ப்பிரைஸ் கொடுங்கள்.
திருமண நாளன்று
திருமண நாளன்று என்ன மாதிரியான பரிசுகளைக் கொடுத்தாலும் அது நிறைவானதாக இருக்காது. அதனால் திருமண நாளன்று ரெட் வெல்வட் பிளேவர் கொண்ட சாக்லெட்களைக் கொடுத்து அசத்துங்கள்.
மன்னிப்பு கேட்பதற்கு
சின்ன சின்ன ஊடல்கள் வரும்போது முதலில் ஆண்கள் தான் வந்து தன்னை சமாதானம் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். ஆண்களும் சென்று மன்னிப்பு கேட்பார்கள். அதற்கு கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு தான் மன்னிப்பார்கள்.
ஆனால் அவர்களுக்கு மிகவும் பிடித்த சாக்லெட்டை வாங்கிக் கொடுத்து மன்னிப்பு கேளுங்கள். உங்களுடைய எல்லா தவறுகளும் உடனே மறந்து போவார்கள்.
வருத்தமாக இருக்கும்போது
பெண்கள் மன வருத்தமாக இருக்கும்போது அவர்களுக்கு சாக்லெட் கொடுங்கள். உணர்வு ரீதியாகவும் சரி, அறிவியில் ரீதியாகவும் அது அவர்களுடைய மன நிலையை மாற்றும்.
அதனால் பெண்கள் வருத்தமாக இருக்கும்போது அவர்களுக்கு சாக்லெட் வாங்கிக் கொடுங்கள்.
சாதனை செய்திருக்கும் சமயங்களில்
பெண்கள் தங்களுடைய வேலையிலோ அல்லது வீட்டிலோ ஏதேனும் முக்கியமான விஷயங்களை செய்து சாதித்திருந்தால் அதை பாராட்டும் விதமாகவும் ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு சாக்லெட் பரிசாகக் கொடுங்கள். அவர்கள் மகிழ்ச்சி அடைவதோடு உற்சாகமும் அடைவார்கள்.
வேலைப்பளு அதிகமாகும்போது
வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ பெண்கள் அதிக வேலைப்பளுவுடன் இருக்கும்போது அவர்களை ஆறுதல் படுத்தவும் இளைப்பாறச் செய்யவும் சாக்லெட்டை பரிசாகக் கொடுங்கள்.
வேலைப்பளுவால் இருந்த மன வருத்தம் அவர்களுக்குக் குறைய சாக்லெட் மிகச்சிறந்த ட்ரீட்டாக இருக்கும்.
Comments
Post a Comment