NEET-UG, CUET, JEE (Main): அட்டவணையின் படி தேர்வுகள் நடக்கும், ஒத்திவைக்கப்படாது புதுடெல்லி: ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2022 க்கு இடையில் தேசிய தேர்வு முகமை (எண்டிஏ) நடத்தும் எந்தவொரு போட்டித் தேர்வுகளுக்கும் அட்டவணையில் மாற்றம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்டிஏ பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு-UG (CUET-UG) , மருத்துவம் மற்றும் அதுசார்ந்த படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு-யுஜி (NEET-UG) மற்றும் பொறியியல் மற்றும் கட்டிடக்கலை படிப்புகளுக்கான கூட்டு நுழைவுத் தேர்வு-முதன்மை (JEE-main) ஆகிய மூன்று பெரிய நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது. ஒரு பிரிவினர் இந்த தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி வருகின்றனர். NEET-UG 2021 -ன் கல்வி ஆண்டின் கவுன்சலிங் மற்றும் துவக்கத்தில் ஏற்பட்ட தாமதம், தேர்வுக்கு தயாராவதற்கு போதுமான நேரம் இல்லாமை ஆகியவற்றை காரணம் காட்டி தெர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 10 வரை நடத்தப்படும் CUET-UG -க்கான தேதிகளை எண்டிஏ கடந்த வாரம் அறிவித்தது. நீட்-யுஜி ஜூலை 17 மற்றும் ஜெஇஇ மெயின்ஸ் தேர்வு ஜூலை 21 முதல் ஜூலை 30 வ...
Comments
Post a Comment