திருட வந்த இடத்தில் காமத்தின் மோகத்தால் 19 வயது மாணவியை கற்பழிக்க முயற்சி!1322750875


திருட வந்த இடத்தில் காமத்தின் மோகத்தால் 19 வயது மாணவியை கற்பழிக்க முயற்சி!


பணமும், நகையும் இல்லன்னா என்ன? அழகான பொண்ணு இருக்கே!,, திருட வந்த இடத்தில் கைவரிசை காட்டிய சிறுவன்..!

கடலூர் மாநகராட்சி, வண்ணாரப்பாளையம் பகுதியை சேர்ந்த அரசு ஊழியர் (47). இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் உணவருந்திய பின்பு வீட்டின் பின்பக்க கதவை மூடாமல், நடு கூடத்தில் படுத்து தூங்கினார்.

அவரது அருகில் இளைய மகளான 19 வயதுடைய கல்லூரி மாணவியும், அவரது மூத்த மகள் வீட்டில் உள்ள ஒரு அறையிலும் தூங்கியுள்ளனர்.

இந்த நிலையில், சுமார் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் நள்ளிரவு நேரத்தில் அரசு ஊழியரின் வீட்டில் பின்பக்க கதவை திறந்து உள்ளே புகுந்து, நகைகள் மற்றும் பணம் ஏதும் இருக்கிறதா? என வீடு முழுவதும் தேடியதாக கூறப்படுகிறது. பணம், நகை எதுவும் கிடைக்காத்ததால் ஏமாற்றமடைந்த சிறுவன் வீட்டில் இருந்து வெளியே செல்ல முயன்றதாக தெரிகிறது.

அந்த நேரத்தில் அங்கே தூங்கிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியின் மீது சிறுவனின் பார்வை திரும்பியது. பின்னர் அந்த சிறுவன், மாணவியின் வாயை பொத்தி, அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். அப்போது மாணவி கூச்சலிட்டதால் சத்தம் கேட்டு எழுந்த அரசு ஊழியர், அந்த சிறுவனை பிடிக்க முயன்றார். அப்போது அவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். அவனுடன் வீட்டின் பின்புறத்தில் நின்று கொண்டிருந்த மேலும் 2 சிறுவர்களும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அரசு ஊழியர் தேவனாம்பட்டினம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 3 சிறுவர்களையும் தேடி வந்தனர். இதற்கிடையில் நேற்று பிற்பகல் தேவனாம்பட்டினம் முனிஸ்வரன் கோவில் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு சிறுவனை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில், அவன் தேவனாம்பட்டினம் சுனாமி நகரை சேர்ந்த 15 வயது னிரம்பிய சிறுவன் என்பதும், அரசு ஊழியர் வீட்டில் புகுந்து திருட முயற்சி செய்தது அவந்தான் என்பதும், அவரது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த சிறுவனை கைது செய்த காவல்துறையினர், அந்த சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 சிறுவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தேவனாம்பட்டினம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Comments

Popular posts from this blog