பிரபல இந்தி பாடகர் மரணம்!! பிரதமர் மோடி இரங்கல்....!!!!!1293453776


பிரபல இந்தி பாடகர் மரணம்!! பிரதமர் மோடி இரங்கல்....!!!!!


பிரபல இந்தி பாடகரான பூபிந்தர் சிங் (82) கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து இவர் கடந்த 10 நாளுக்கு முன் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் பூபிந்தர் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெறும் என அவரது மனைவி மிதாலி தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரசிகர்கள், பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog