10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20-ம் தேதி வெளியீடு!!512794862


10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20-ம் தேதி வெளியீடு!!


பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 20ஆம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த  ப்ளஸ் 2 மற்றும்  பத்தாம் வகுப்பு S.S.L.C பொதுத்தேர்வு முடிவுகள்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களால் ஜூன் 20-ம் தேதி (திங்கட்கிழமை) அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடப்படவுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்  நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் மற்றும் நேரம்

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்:  20.06.2022(திங்கட்கிழமை) காலை  9.30  மணிக்கு
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் : ( S.S.L.C) 20.06.2022 (திங்கட்கிழமை) நண்பகல்  12.00  மணிக்கு வெளியாகிறது.

இணையதள முகவரி :

 tnresults.nic.in,

dge1.tn.nic.in,

dge2.tn.nic.in,

dge.tn.gov.in

தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் ,  தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவித்த நிலையில் 20-ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இருபதாம் தேதி முன்கூட்டியே வெளியாகிறது.

Comments

Popular posts from this blog

50 Beautiful Burgundy Hairstyles to Consider for 2020

NEET-UG, CUET, JEE (Main): அட்டவணையின் படி தேர்வுகள் நடக்கும், ஒத்திவைக்கப்படாது