RCB vs LSG Preview: ‘இரு அணிகளின் பலம், பலவீனம் இதுதான்’…ஆர்சிபி வெற்றிபெறுமா? விபரம் இதோ!


RCB vs LSG Preview: ‘இரு அணிகளின் பலம், பலவீனம் இதுதான்’…ஆர்சிபி வெற்றிபெறுமா? விபரம் இதோ!


ஐபிஎல் 15ஆவது சீசன் எலிமினேஷன் 1 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதில் தோல்வியடையும் அணி வெளியேறிவிடும். வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்கு செல்வதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் விளையாடும்.

இப்போட்டியில் தோல்வியடையும் அணி வெளியேற்றப்படும் என்பதால், ஆட்டத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அதே கொல்கத்தா மைதானத்தில்தான் இன்றைய போட்டியும் நடைபெறவுள்ளது.

ஆர்சிபி பலம், பலவீனம்:

லக்னோ அணிக் கேப்டன் கே.எல்.ராகுல், ஆர்சிபி முன்னணி பௌலர்கள் ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ் ஆகியோருக்கு எதிராக 70 பந்துகளை எதிர்கொண்டு 125 ரன்களை பறக்கவிட்டுள்ளார். இதனால் இன்றும் ராகுல் அதிரடி காட்ட வாய்ப்புள்ளது. இவரை சமாளிக்க ஹசரங்காவை நம்ப வேண்டிய நிலையில் அந்த அணி இருக்கிறது.

தினேஷ் கார்த்திக்கு எதிராக க்ருனால் பாண்டியா 28 பந்துகளைவீசி 24 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, 2 முறை வீழ்த்தியிருக்கிறார். இன்றும் இந்த ரெக்கார்ட் தொடர்ந்தால், லக்னோ அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.

ஸ்பின்னர்களுக்கு எதிராக:

பொதுவாகவே ஆர்சிபி அணி இந்த சீசன் முழுவதும் ஸ்பின்னர்களுக்கு எதிராக திணறியிருக்கிறார்கள். இவர்களுக்கு எதிராக 22.82 சராசரியுடன் 7.49 ஸ்ட்ரைக் ரேட்டுடன் மட்டுமே ரன்களை அடித்திருக்கிறார்கள். இதனால், இன்று ஸ்பின்னர்கள் ரவி பிஷ்னோய், க்ருனால் பாண்டியா ஆகியோர் விக்கெட் வேட்டையில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது. வேகப்பந்து வீச்சாளர்கள் ஆவேஷ் கான், மோக்சின் கான், ஹோல்டர் போன்றவர்களும் சிறப்பாக பந்துவீசி வருவது, ஆர்சிபிக்கு பின்னடைவான விஷயம்தான்.

லக்னோ பலம், பலவீனம்:

கடந்த போட்டியில் சதம் அடித்த டி காக்கிற்கு எதிராக ஜோஷ் ஹேசில்வுட் நல்ல ரெக்கார்ட் வைத்துள்ளார். இதனால் இன்று முதல் ஓவரில்கூட டி காக் ஆட்டமிழக்க அதிக வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் அது, லக்னோவுக்கு பெரிய பின்னடைவாக மாறிவிடும். ஆயூஷ் படோனி, எவின் லிவிஸ், ஓரா, ஸ்டாய்னிஸ், ஹோல்டர் போன்றவர்கள் தொடர்ந்து ரன்களை குவிக்க திணறி வருகிறார்கள். இதனால் ஓபனர்கள் நிலைத்து நின்று விளையாட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

ஹசரங்கா ராக்ஸ்:

வனிந்து ஹசரங்கா மிடில் ஓவர்களில் 17 விக்கெட்களை சாய்த்துள்ளார். பலவீனமான மிடில் வரிசை பேட்ஸ்மேன்களை வைத்திருக்கும் லக்னோ அணிக்கு இது கெட்ட செய்திதான். கடந்த முறை லக்னோவுக்கு எதிராக விளையாடியபோது சாபஷ் அகமது 25/0 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். இதனால் இன்று மிடில் ஓவர்களில் லக்னோ விளையாடுவதைப் பொறுத்துதான் வெற்றி, தோல்வி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹர்ஷல் படேலுக்கு கடந்த போட்டியின்போது காயம் ஏற்பட்டதால், இன்று ஆகாஷ் தீப் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.

Comments

Popular posts from this blog