Osaka tamil International film festival...6 விருதுகளை வென்ற சூரரைப் போற்று


Osaka tamil International film festival...6 விருதுகளை வென்ற சூரரைப் போற்று


சர்வதேச அ்ளவில் பாராட்டை பெற்ற இந்த படம் பல விருதுகளை வென்றுள்ளது. தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதையும் சுதா கொங்கராவே இயக்க, சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிக்கிறது. இதில் சூர்யா நடித்த ரோலில் அக்ஷய்குமார் நடிக்க உள்ளார்.

சூரரைப் போற்று படம் ஏற்கனவே பல சர்வதேச விருதுகளை வென்ற நிலையில், தற்போது Osaka tamil International film festival வில் 6 விருதுகளை வென்றுள்ளது. இந்த தகவலை 2டி என்டர்டைன்மென்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. சிறந்த தமிழ் படம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த டைரக்டர், சிறந்த நடிகர், சிறந்த ஆர்ட் டைரக்டர், சிறந்த தயாரிப்பு நிறுவனம் ஆகிய 6 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவிற்கும், சிறந்த இசையமைப்பாளர் விருது ஜி.வி.பிரகாஷ் குமாருக்கும், சிறந்த டைரக்டர் விருது சுதா கொங்கராவிற்கும், சிறந்த தயாரிப்பு நிறுவனத்திற்கான விருது 2டி என்டர்டைன்மென்ட் , சிறந்த ஆர்ட் டைரக்டர் விருது ஜாக்கிவிற்கு கிடைத்துள்ளது. இதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சூரரைப் போற்று படம் இதுவரை 35 க்கும் அதிகமான சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. ஓடிடியில் ரிலீசாகி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து, விருதுகளை அள்ளி குவித்து வரும் ஒரே இந்திய படம் சூரரைப் போற்று தான். இந்த படம் ஆஸ்கார் விருதிற்காக கூட பரிந்துரைக்கப்பட்டது. படம் ரிலீசாகி 2 ஆண்டுகள் ஆன பிறகும் இந்த படம் பல விருதுகளை அள்ளி வருகிறது.

பல படங்களில் சூர்யா பிஸி

சூர்யா தற்போது பாலா இயக்கும் சூர்யா 41 படத்தின் ஷுட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். விரைவில் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தையும் துவக்க உள்ளார். இதைத் தொடர்ந்து அயலான் டைரக்டர் ரவிக்குமார், அதைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் மற்றொரு படத்திலும் சூர்யா நடிக்க உள்ளார். இதுவும் உண்மை சம்பவத்தின் அடிப்படையிலான கதை தானாம். இந்த படத்தை கேஜிஎஃப் படங்களை தயாரித்த ஹம்பாலா ஃபிலிம்ஸ் தான் தயாரிக்க உள்ளது.

சூர்யா தற்போது டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இந்த படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது.

Comments

Popular posts from this blog