IPL 2022: ‘உன்ன நம்புனது குத்தமா?’…9.2 கோடி கொடுத்து வாங்கி..எந்த பயனும் இல்ல: லக்னோ அணி அதிருப்தி!


IPL 2022: ‘உன்ன நம்புனது குத்தமா?’…9.2 கோடி கொடுத்து வாங்கி..எந்த பயனும் இல்ல: லக்னோ அணி அதிருப்தி!


ஐபிஎல் 15ஆவது சீசன் முதல், புதிய அணிகளாக லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், குஜராத் டைடன்ஸ் அணிகள் களமிறங்கியுள்ளன.

இதில் குஜராத் அணி தொடர் வெற்றிகளை பெற்று, முதல் இடத்தை உறுதி செய்துவிட்டது. லக்னோ அணியும் துவக்கத்தில் இருந்தே அபாரமாக விளையாடி, புள்ளிப் பட்டியலின் முதல் இரண்டு இடங்களில் ஒன்றில் நீடித்து வந்த நிலையில், கடைசி இரண்டு போட்டிகளில் படுமோசமாக தோற்று, தற்போது மூன்றாவது இடத்திற்கு நகர்ந்துள்ளது.

9.2கோடி:

இந்த அணியின் தோல்விகளுக்கு, பின்னடைவுகளுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது மார்க்கஸ் ஸ்டாயன்ஸ்தான். மெகா ஏலத்திற்கு முன்பு, இவர் மீது முழு நம்பிக்கை வைத்து 9.2 கோடிக்கு லக்னோ அணி தக்கவைத்தது.

ஸ்டாய்னிஸ் பங்களிப்பு:

ஆனால், தக்கவைத்ததுக்கு ஏற்றார்போல் ஸ்டாய்னிஸ் செயல்படவில்லை. இதுவரை 9 போட்டிகளில் 21.00 சராசரியுடன் 147 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். அதிகபட்சம் 38 ரன்கள் ஆகும். பந்துவீச்சில் 9 போட்டிகளில் ஒரு விக்கெட்டை மட்டுமே சாய்த்துள்ளார்.

கட்டாயத்தில்:

இது ஸ்டாய்னிஸின் வழக்கமான ஆட்டம் கிடையாது. இவர் களத்தில் நின்றாலே, எப்பேர்ப்பட்ட பௌலர்களும் நடுங்குவார்கள். எப்போதும் பதற்றமில்லாமல் அசால்ட்டாக சிக்ஸர்களை விளாசக் கூடியவர். இன்னும் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. எதிர்வரும் போட்டிகள் லக்னோ அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இதனால், இனி வரும் போட்டிகளில் ஸ்டாய்னிஸ் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

Comments

Popular posts from this blog