எல்ஐசி பங்கு விற்பனை: முதலீட்டாளர்களுக்கு ரூ.42,500 கோடி இழப்பு.. அரசுக்கு ரூ.21,000 கோடி லாபம்!!


எல்ஐசி பங்கு விற்பனை: முதலீட்டாளர்களுக்கு ரூ.42,500 கோடி இழப்பு.. அரசுக்கு ரூ.21,000 கோடி லாபம்!!


மும்பை : நாடுமுழுவதும் உள்ள முதலீட்டாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எல்ஐசி பங்கு விற்பனை இன்று நடந்தது. ஆனால் எல்ஐசி பங்கு விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு ரூ.42,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீட செய்யப்பட்ட எல்ஐசி ஒரு பங்கு ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்த விலையைக் காட்டிலும் 9 சதவீதம் விலை குறைத்தே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.மும்பை பங்குச் சந்தையில் எல்ஐசி ஒரு பங்கு ரூ.867 என்ற அளவில் முதல் நாளில் விற்பனைக்கு வந்தது.

அதே போல் தேசியப் பங்குச்சந்தையில் நிப்டியில் எல்ஐசி பங்கு விலை ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்டநிலையில், ஒரு பங்கு விலை ரூ.872ஆக உள்ளது. இதனால், எல்ஐசி பங்குகளின் விலை மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், ரூ.5.57 லட்சம் கோடியாக சரிவை சந்தித்துள்ளது. சந்தைக்கு வந்தமுதல் நாளிலேயே பெரும் லாபம் ஈட்டலாம் என்று எல்ஐசி பங்குகளில் முதலீடு செய்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.எல்ஐசி பங்குகள் விற்பனை செய்ததன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.21,000 கோடி லாபம் கிடைத்துள்ளது.  அதே வேளையில், சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய பிறகு, 700 புள்ளிகள் உயர்ந்தும் கூட, எல்ஐசி பங்குகள் விலை உயராததால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

Comments

Popular posts from this blog

Kerala dowry death I hang my head in shame #Death