13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மார்வெல் நடிகைக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை.. ஷாக்கில் ஹாலிவுட்!


13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மார்வெல் நடிகைக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை.. ஷாக்கில் ஹாலிவுட்!


13 முதல் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நடிகை ஸாரா பைத்தியன் மீது குற்றம்சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை நாட்டிங்காமில் உள்ள கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு இப்படியொரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நடிகை ஸாரா பைத்தியனுக்கு நீதிபதி அதிகபட்சமாக 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விடுத்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி உள்ளார். பண பலத்தால் இந்த வழக்கில் இருந்து எப்படியும் தப்பித்து விடலாம் என நினைத்த மார்வெல் பட நடிகைக்கு இப்படியொரு தண்டனை கிடைத்திருப்பதை ஹாலிவுட் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

சிறுமியை பாலியல் ரீதியாக தொல்லை செய்ய உடந்தையாக இருந்தது மற்றும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக நடிகை ஸாராவின் கணவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பலாத்கார வழக்கில் நடிகை ஸாராவின் கணவர் விக்டர் மார்க்கிற்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஹாலிவுட்டில் இதுபோன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் பாலியல் ரீதியான தொல்லை வழக்குகளில் சிக்கி வந்த நிலையில், நடிகை ஒருவருக்கு இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தண்டனை கிடைத்திருப்பது ஹாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comments

Popular posts from this blog

50 Beautiful Burgundy Hairstyles to Consider for 2020

NEET-UG, CUET, JEE (Main): அட்டவணையின் படி தேர்வுகள் நடக்கும், ஒத்திவைக்கப்படாது