TNPSC Group 4 தேர்வு தேதி எப்போது? காலியிடங்கள் எத்தனை? இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிப்பு
TNPSC Group 4 தேர்வு தேதி எப்போது? காலியிடங்கள் எத்தனை? இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிப்பு
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். குரூப் -4 தேர்வுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்படும் என்றும் போட்டித்தேர்வுகள் ஜூன் மாதம் நடத்தபடும் என்று இந்த ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு மொத்தம் 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளன.
Also Read: Anbil Mahesh | பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குரூப் - 4 தேர்வுக்கான அறிவிக்கை வெளியானதாக சமூகவலைத்தளத்தில் தகவல் பரவியது. இதுதொடர்பாக விளக்கம் அளித்த டிஎன்பிஎஸ்சி செயலர், குரூப் -4 குறித்த தவறான தகவல்கள் சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது. டிஎன்பிஎஸ்சி அறிவிக்கைகள் அனைத்தும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என விளக்கமும் கொடுத்தார்.
இந்தநிலையில், குரூப் - 4 தேர்வு குறித்து இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தேர்வாணைய தலைவர் கா. பாலசந்திரன் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார். இந்த அறிவிப்பால் போட்டித்தேர்வுக்கு தயாராகும் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment