\'பீஸ்ட்\' டீசர், டிரைலர் \'அப்டேட்\' கேட்கும் ரசிகர்கள்


\'பீஸ்ட்\' டீசர், டிரைலர் \'அப்டேட்\' கேட்கும் ரசிகர்கள்


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் படம் 'பீஸ்ட்'. இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஏப்ரல் 13ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் அல்லது டிரைலர் எப்போது வெளியிடப் போகிறீர்கள் என தயாரிப்பு நிறுவனத்திடம் ரசிகர்கள் தொடர்ந்து 'அப்டேட்' கேட்டு வருகிறார்கள்.

படம் வெளியாவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் டீசர் கூட இதுவரை வெளியிடப்படாதது ஆச்சரியமளிக்கிறது என திரையுலகத்தினரும் தெரிவிக்கிறார்கள். 

'பீஸ்ட்' படத்திற்குப் போட்டியாக இல்லாமல் அடுத்த நாளே வெளியாக உள்ள 'கேஜிஎப் 2' படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியாகி 24 மணி நேரத்தில் 100 மில்லியன் பார்வைகளை 5 மொழிகளில் கடந்துள்ளது.

'பீஸ்ட்' டீசர் அல்லது டிரைலர் 5 மொழிகளில் வெளியாக அது 'கேஜிஎப் 2' படத்தின் 24 மணி நேர சாதனையை முறியடித்தாக வேண்டும். அப்போதுதான் 'பீஸ்ட்' படத்துடன் 'கேஜிஎப் 2' போட்டியா அல்லது 'கேஜிஎப் 2' படத்துடன் 'பீஸ்ட்' போட்டியா என்று சொல்ல முடியும்.

Comments

Popular posts from this blog