கிருஷ்ணகிரி அருகே எருதாட்டம் காளை முட்டியதில் பள்ளி மாணவன் பலி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சப்படியில், நேற்று எருதுவிடும் விழா நடந்தது. இதில் 250க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. விழாவை காண 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். விழா துவங்கிய சிறிது நேரத்தில், மிரண்டு வந்த காளை ஒன்று, பார்வையாளர் பகுதியில் கூட்டத்தோடு நின்றிருந்த 15 வயது சிறுவன் மீது முட்டி தள்ளி விட்டு ஓடியது.
இதில் படுகாயமடைந்த சிறுவனை, அங்கிருந்தவர்கள் மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அந்த சிறுவன் உயிரிழந்தான். விசாரணையில், அந்த சிறுவன், கானலெட்டி பகுதியைச் சேர்ந்த செம்பப்பா மகன் திவாகர்(15) என்றும், 9ம் வகுப்பு படித்து வந்த திவாகர், பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு, எருதாட்டத்தை வேடிக்கை பார்க்க வந்ததும், அப்போது காளை முட்டி...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment