நாளை மறுநாள் முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை!! தேவையான ஏற்பாட்டை செய்துக்கோங்க!!


நாளை மறுநாள் முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை!! தேவையான ஏற்பாட்டை செய்துக்கோங்க!!


மார்ச் மாதம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. மார்ச் மாதத்துடன் நிதியாண்டு முடிவடைய இருக்கும் நிலையில் வங்கிகள் அனைத்தும்  வருடாந்திர கணக்கை முடித்துக்கொள்ள மாத இறுதி நாள் விடுமுறை அறிவித்துள்ளன. அத்துடன் வங்கி  ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்  ஊதிய உயர்வு,பணி நியமனம்  உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.

 

இதனால்  வங்கிச் சேவைகள் பாதிக்கப்படலாம்.வங்கி வாடிக்கையாளர்கள் தேவையான ஏற்பாடுகளை செய்துகொள்ள பாரத ஸ்டேட் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளன. 
அதன்படி மார்ச் 26ம் தேதி 4வது சனிக்கிழமை விடுமுறை அடுத்த நாள் மார்ச் 27ம் தேதி ஞாயிறு  பொது விடுமுறை. அதற்கு அடுத்து மார்ச் 28 மற்றும் 29ம் தேதிகளில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கிகள் சங்கம் உட்பட பல்வேறு சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர் .

 

இதனால் தொடர்ந்து 4 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை வர இருப்பதால் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. வாடிக்கையாளர்களின் அத்தியாவசிய மற்றும அவசர தேவைகளுக்காக வேலைநிறுத்தம் நடைபெறும் நாட்களில் வங்கி மற்றும் கிளை அலுவலகங்களில் இயல்பான செயல்பாட்டை உறுதி செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருந்த போதிலும் சிறுகுறைபாடுகளையும் களையும் வகையில் இந்த அறிவிப்பு  வெளியிடப்படுவதாக பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

NEET-UG, CUET, JEE (Main): அட்டவணையின் படி தேர்வுகள் நடக்கும், ஒத்திவைக்கப்படாது

50 Beautiful Burgundy Hairstyles to Consider for 2020

கடகம் ராசிக்கான வார ராசிபலன் ( நவம்பர் 07 முதல் நவம்பர் 13 ) - Kadagam Rasipalan.