12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி நடைபெறும் பொது வேலைநிறுத்தத்திற்கு திமுக முழு ஆதரவு: பொது செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு சென்னை: 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் அகில இந்திய பொது வேலைநிறுத்த போராட்டத்திற்கு திமுக முழு ஆதரவு அளிக்கும்” என்று பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: “நாட்டைக் காப்போம். மக்களைக் காப்போம்” என்ற முழக்கத்துடன் ஒன்றிய பாஜ அரசின் ‘தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, நாட்டிற்கு விரோதமான கொள்கைகளை’ கண்டித்து வருகிற 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு திமுக ஆதரவு அளிக்க வேண்டும் என தொ.மு.ச. உள்ளிட்ட 10 தொழிலாளர் சங்க நிர்வாகிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்கள். இந்த அகில இந்திய பொது வேலைநிறுத்தம் ஏற்கனவே நடந்து வரும் பல்வேறு தொழிலாளர் போராட்டங்களின் தொடர்ச்சியாக- “தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிடுதல், மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறுதல்” “தேசிய பணமாக்கும் கொள்கை மூலம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதலை கைவிடுதல்” உள்ளிட்ட ...